வேல் பாரி
வேல் பாரி
"வேல் பாரி" எழுத்து மேலிருந்து கீழ் "டமால்" என விழுந்தது
Sound: காட்டின் சத்தம் ஒலிக்கிறது.
"இரவு நேர நிலவொளியில் நடக்கும் காட்சி"
"சந்தோஷமான பாட்டு சத்தமும் மேளச் சத்தமும் தேன்குழலி காதில் ஒலிக்கிறது"
கபிலர்:
மெல்ல தேன்குழலி அருகில் நடந்து வருகிறார் " ஏன் அம்மா இவ்வளவு சோகமாக அமர்ந்து கொண்டிருக்கிறார்"
தேன்குழலி: நான் எனது தோழி , அங்கவை,சங்கவை இவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன் ஐயா.
கபிலர்:அவர்களின் திருமணத்திற்காக நான் வெளியூர் பயணம் செல்லவிருக்கிறேன் அம்மா.
தேன்குழலி:
மூவேந்தரின் சூழ்ச்சிகள் அவரின் மனதை காயப்படுத்தி உள்ளது ஐயா.
கபிலர்:ஆம் நான் அறிவேன்
"அரண்மனை மண்டபம் மற்றும் வெளிப்பகுதி"
தேன்குழலி: அவ்வை பாட்டியே வணக்கம் வாருங்கள் வாருங்கள்.
அவ்வையார்: அங்கவை,சங்கவை தேன்குழலி அனைத்து விஷயத்தையும் நான் அறிந்தேன். என் மனம் மிகவும் வருந்தியது ஆகையால் தான் நான் ஓடோடி வந்தேன் உங்களை காண்பதற்கு.மற்றும் அவர்களின் திருமணத்தைப் பற்றி பேசுவதற்கும் வந்தேன் அம்மா
தேன்குழலி: மூவேந்தர்களின் கட்டுப்பாட்டையும் மீறி?!
அவ்வையார்:கவலை வேண்டாம் மணமகனை பார்த்துவிட்டு,
மூவேந்தர்கள் இடமும் நான் பேசுகிறேன்
தேன்குழலி: மிக்க நன்றி அவ்வை பாட்டியே.
அவ்வையார்:மூவேந்தர்களையும் காண்பதற்கு நான் வருகிறேன் என ஓலை தயார்படுத்துங்கள்.
தேன்குழலி:அப்படியே ஆகட்டும், நான் செய்கிறேன் அவ்வை பாட்டியே.
"அரசவை உட்பகுதி மூவேந்தர்கள்,தேன்குழலி அவ்வையார் மற்றும் அவை கூட்டங்கள்"
அவ்வையார்: சேர மன்னன், சோழ மன்னன், பாண்டிய மன்னன், மூவேந்தரையும் நான் வணங்குகிறேன்
மன்னர்கள்: வணக்கம் மூதாட்டி அவர்களே!!
"அரசவை உட்பகுதி"
அவ்வையார்:மன்னர்களே! பாரியின் மகளின் திருமணத்திற்கு மிகவும் தடையாக உள்ளீர்கள் மற்றும் மனப் போரின் தலையை கொய்து விடுவேன் என கூறுகிறீர்களே, இது எந்த விதத்தில் நியாயமாகும் கூறுங்கள்.
மன்னர்கள்: அவ்வையாரை
பாரி எங்களுக்கு செய்த துரோகத்தை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.
"அரசவை உட்பகுதி
தேன்குழலி: நிறுத்துங்கள் மன்னர்களே, பாரிக்கு நீங்கள் செய்த துரோகம் தான் அதிகம்.
அவர் எங்களுக்காக செய்த நல்ல காரியங்கள் எண்ணற்றவை. அவருடைய புகழ் உங்களுக்கு கிட்டவே கிட்டாது. ஹா ஹா ஹா.அவரைப் பற்றியும்,அவர் நாட்டுக்காக செய்த நன்மைகள் பல!!!! அதில் சில சின்ன காரியங்களை கூறுகிறேன் கேளுங்கள்
நினைவூட்டல் காட்சி,
"பாரி புகழ், இயற்கை வெளிப்புறக் காட்சிகள்"
(Voice over) பரம்பு மலை எவ்வியூர் எனும் குறிஞ்சி நிலத்தை ஆண்டுவந்தார் பாரி.
இயற்கையை மிகவும் விரும்புபவர் அவர் மக்களின் நலத்தை பேணி காப்பவர்.பறம்பு மலையில் அனைத்து வகையான கிழங்குகள்,மூலிகைகள் மற்றும் நீர் வளங்கள் தேவையான அளவு உள்ளது .
"பாரி புகழ், இயற்கை வெளிப்புறக் காட்சிகள்"
பாரி தேர்: " அங்கவை, பாரி இருவரும் தேரில் வந்தனர்" பாரியின் தங்க நிற தேர் தரையில் உருண்டு திரண்டு ஓடி வந்திருந்தன. திடீரென பாரி தேரை நிறுத்தினார்.
அங்கவை:என்னப்பா ஆயிற்று தேரை ஏன் நிறுத்தினார்கள்
பாரி: பாரம்மா அந்த கொடி படர்வதற்கு இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
அங்கவை: ஆம் தந்தையே.
பாரி: வா மகளே போய் பார்ப்போம்.
"இருவரும் தேரை விட்டு இறங்கி சென்று முல்லை கொடி இடம் நின்றனர், பின்னர் பாரி தங்கத் தேரை தரதரவென முல்லைக் கொடி இருக்குமிடத்தில் இழுத்து வந்தார். பின்னர் அக்கொடி படர் வருவதற்காக தேர் மீது கொடியை வைத்துவிட்டு இருவரும் நடந்தே சென்றனர்".
அன்றிலிருந்து முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்று ஊர் மக்களால் போற்றப்பட்டார்.
"பாரி புகழ், இயற்கை வெளிப்புறக் காட்சிகள்"
போர்வீரன்: காலில் அடிபட்ட குதிரையின் மீது போர்வீரன் அமர்ந்து கொண்டு மெதுவாக குதிரையை செலுத்தி வந்தான்.
பாரி: இதைக் கண்ட பாரி குதிரையை நிறுத்துங்கள் வீரனே என்றார்.குதிரைக்கு என்னவாயிற்று ஏன் இப்படி மெதுவாக குதிரைகள் நொண்டி கொண்டு வருகின்றன.
போர்வீரன்:
மகாராஜா குறிஞ்சி மலையின் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் வேகமாக குதிரைகள் செல்லும்பொழுது காலில் அடிபடுகிறது. பாறைகள் மீது குதிரைகள் வேகமாக செல்ல இயலவில்லை மகாராஜா.
பாரி: இதைக்கண்ட பாரி சிறிது நேரம் யோசித்து, மாவீரனே!
குதிரையின் பாதம் முதல் முழங்கால் வரை மாவீரனுக்கு போடும் கவசங்களை போல குதிரைகளுக்கும் அணியுங்கள், இது என் ஆணை.
போர்வீரன்:சரி அப்படியே செய்கிறேன் மகாராஜா.
"பாரி அரண்மனை உட்பகுதி"
பாரி: புலவர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வாரி வழங்கினார் எங்கள் பாரிவள்ளல்.
(Voice over): சேர சோழ பாண்டிய மன்னர்கள் போர் புரியும் போது அவர்களிடமிருந்து தோற்றவர்கள் அவர்களால் கைவிடப்பட்டவர்கள் அனைவரும் பாரிடம் தஞ்சம் புகுந்தனர். இந்த குறுநில மன்னர்களாகவும் மற்றும் மக்களுக்காகவும் இந்த கொற்றவை கூத்து நடைபெறும்,
பாரி: நம்மை வீழ்த்தி அவரை மீண்டும் நாம் வீழ்த்திடுவோம் என வேல்பாரி புத்துணர்வு ஊட்டுவார் குறுநில மன்னர்களுக்கு
"கொற்றவை கூத்து வீதிகள்"
கூத்தர்கள் ஆடியும் பாடியும் கூத்தாடியும் மன்னர் முன்னே மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். பாரி மன்னரும் அவரோடு சேர்ந்து மகிழ்கிறார்".
"அரசவையின் உள்ளே சேரமன்னன் தேன்குழலியை,அவ்வையாரை எதிர்த்து வாதிடுகிறார்"
சேர மன்னன்: எங்கள் மூவேந்தரையும் எதிர்ப்பதற்கு படைகளை திரட்டுவது நியாயமா! தர்மமா!
அவ்வையார்: கோபமாக வேல்பாரி உங்களிடம் பகைமை பாடவில்லை. உங்களால் வீழ்த்தப்பட்டர்கள், கைவிடப்பட்டவர்கள் மட்டுமே பகைமை பாடுகிறார்கள்.ஆகையால் உங்களுக்கும் வேள்பாரிக்கும் என்ன பிரச்சனை மூவேந்தர்களே!!
"கடல் நிலப்பரப்பு காட்சிகள்"
சேரமன்னன்:சேர தேச நிலப்பரப்பை விரிவுபடுத்துவதற்காக, குறுநில மன்னர்களை எங்களுடன் சேர்ந்து இருக்கச் சொன்னோம். ஆனால் வேல்பாரி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆகையால் வேல்பாரி மீது நாங்கள் போர் தொடுத்தோம்.
ஆனால் அப்போரில் என் தந்தையின் தலையை என் கண்முன்னே கொய்தார் வேல்பாரி.
இதுவே என் பகைக்கு காரணம் புலவரே.
"சேர நிலப்பரப்பு வெளிப்புறக் காட்சிகள்"
சேரமன்னன்: சில நாட்களுக்குப் பிறகு அதே கோபத்தோடு வேல்பாரியை மீண்டும் படை எடுத்தேன்.
ஆனால் அவன் குதிரை படை பலம் எனக்குத் தெரியும், ஆகையால் தோகை நாயை கொண்டு அவனை வீழ்த்த முயன்றேன்.அப்போது
"போர்புரியும் காட்சிகள்"
போர்களில் நாய்களை எதிர்க்க முடியாமல் குதிரைகள் சில விழுந்தன ஓடின சில இறந்தன.
இதைக்கண்ட பாரி ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றார். எப்படி வீழ்த்துவது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
"வேல்பாரி கிராம மக்களுடன் கலந்துரையாடல்"
கிராம தலைவர்: வாருங்கள் மன்னரே!! ஆழ்ந்த சிந்தனையில் உள்ளீர் என்னவாயிற்று?
பாரி: எங்கள் குதிரைகளைக் கோம்பை நாய்கள் வேட்டையாடுகின்றன. பாதி குதிரைகள் காயத்துடன் தப்பித்தது, சில குதிரைகள் இருந்தன. இதற்கு என்ன செய்வது என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
கிராம தலைவர்: கவலைப்படாதீர் மன்னரே!! என்னிடம் இதை கையாளுவதற்கு சில உத்திகள் உள்ளன.
பாரி: கூறுங்கள் ஐயா!!!
கிராம தலைவர்: இப்படி செய்ய வேண்டும் என்ற விஷயத்தை கிராம தலைவர் கூறுகிறார்
பாரி: சரியான யுத்தியை கூறி உள்ளீர்கள் ஐயா நான் அப்படியே செய்கிறேன்.வருகிறேன் ஐயா.
"குதிரை போர் புரியும் இடம்"
குதிரைகள் ஓரிடத்தில் நின்றிருந்தன. இதைக்கண்ட கோம்பை நாய் வெறியுடன் குதிரை கடிப்பதற்கு ஓடிவந்தன, வழியில் சில பிசுபிசுப்பாக காலிலும், உடலிலும் ஒட்டியது. வாசத்தை முகர்ந்த வண்டுகள் நாய்களை கொட்டிக் கொட்டி விரட்டியடித்தது. இதைக் கண்ட வீரன் மிகவும் திகைத்தான் சிரித்தான்.
மாவீரன்: எப்படி எங்க இது நிகழ்ந்தது
பாரி: காய்ச்சிய கரும்பு பாகு தான் அந்த பிசின்.
மாவீரன்: ஹா ஹா ஹா நன்றாக புரிந்தது மகாராஜா.
இடம் போர்க்களம். சேரனின் குதிரைப் படைகளை விரட்டி அடிக்கும் காட்சி
"அரசவை காட்சி"
சேர மன்னன்: இந்தப் போரின் தோல்விக்கும், என் தந்தையின் மரணத்திற்கும் தான் நான் வேல் பாரின் மீது போர் தொடுத்தேன்.
"அரசவையின் உட்பகுதி காட்சிகள்"
சோழ மன்னன்: அது சேரனுக்கு மட்டும்தானா, எனக்கு என்ன செய்தார் தெரியுமா அவ்வைப் பாட்டியை!
அவ்வையார்: கூறுங்கள் மன்னரே!!
செங்கண்ண சோழன்: மலையில் உள்ள பொக்கிஷங்கள், வைரங்கள, விலை மதிப்புடைய பொருட்கள் பாரம்பரிய சொத்துக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பாலி என்னும் இடத்தில் மறைத்து வைத்தார்கள். பாலி என்னும் இடத்திற்கு காவல் வேல்பாரி ஆகையினால் தான் அவரை போர்தொடுத்து அனைத்தையும் கைப்பற்ற எண்ணினேன்.
"இடம் பிரான்மலை, போர்க்களம் மற்றும் செங்கண்ணன் சோழன் போர் பகுதி"
சோழ மன்னன்: யானைப் படையை எடுத்துக் கொண்டு பாலி என்னும் இடத்திற்கு புறப்பட்டார்.
"இடம் பிரான்மலை, போர்க்களம்"
பாரி: என்ன போர் வீரனே ஒரே பதட்டத்தோடு ஓடி வருகிறாய் என்ன ஆயிற்று.
போர்வீரன்: செங்கண்ணன் சோழன் யானைப் படையுடன் நம்மை தாக்குவதற்கு வருகிறார் மகாராஜா
பாரி: ஓ அவர்கள் பாலி மலையில் பொக்கிஷத்தை கைப்பற்ற வருகிறார்களோ!! கவலை வேண்டாம், மாவீரனே நீங்கள் கிராமத்தில் சென்று ஆங்காங்கு உள்ள மக்களிடம் ஆதி மலையில் தான் அந்த பொக்கிஷங்கள் உள்ளது என்ற வதந்திகளை பரப்புங்கள்!
போர்வீரன்:ஆம் அப்படியே செய்கிறேன் மகாராஜா.
"பிரான்மலை கிராமப்புற இடங்கள்"
அனைத்து கிராமப்புற மக்களும் ஆதி மலையில் அனைத்து பொக்கிஷங்களும் உள்ளன என்று அரசல்புரசலாக பேசிக்கொண்டார்கள்.
சோழ போர்வீரன்: மகாராஜா ஆதிமலை வழியாக சென்றால் நாம் அனைத்ப் பொருள்களையும் கைப்பற்றி விடலாம் இதை என் காதுபட கிராம மக்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டேன்.
சேர மன்னன்:
அப்படியா!! உடனே அனைத்து யானை படைகளையும் திருப்புங்கள் ஆதிமலை வழியாக நாம் செல்வோம் வாருங்கள்.
"அனைத்து போர்வீரர்களும் காட்டு வழியாக யானை மீது அமர்ந்து கொண்டு வேகமாக ஆடி மலையை நோக்கி செல்கிறார்கள்"
பாரி:
போர் வீரனே விரைந்து வா
போர்வீரன்: சொல்லுங்கள் மகாராஜா!!
பாரி: நம் வீரர்களை அழைத்துக் கொண்டு ஆதிமறை காட்டின் வரும் வழியில் எறும்புகளை உயிரோடு பொட்டலமாகக் கட்டிக் கொண்டு மரத்திலேறி சரியாக யானையின் காதில் விழும்படி அடிக்கவும் மற்றதெல்லாம் தானாக நடக்கும்.
போர்வீரன்: சரி மகராஜா அப்படியே நான் செய்கிறேன்
சேர மன்னன்: போர் வீரனே மெல்ல வாருங்கள் எதிரிகளின் சத்தம் எங்கோ கேட்கிறது.
வீரன்: அப்படியே ஆகட்டும் மகராஜா
"திடீரென மரத்திலிருந்து பொட்டலங்கள் ஆங்காங்கு டமால் டமால் என யானைகளின் காதுகளில் விழுந்தது"
"சேர மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை சிறிது நேரம் திகைத்து நின்றனர் கண்கள் சுருங்கின திடீரென அலறினார்'
சேரமன்னர்: வீரர்களே யானைகளை ஆங்காங்கே
திருப்புங்கள். சிறிதுநேரத்தில் யானைக்கு மதம் பிடித்து விடும்.
பாரி: குதிரைகளை விரைந்து செலுத்துங்கள் வீரர்களே!!
"மதம் பிடித்த யானைகள் ஓட்டம் பிடித்தன.
மிஞ்சிய சில வீரர்களையும், யானைகளையும், பாரி குதிரை படையுடன் அடித்து விரட்டினார்.
"அரசவை உட்பகுதி"
சேர மன்னன்: மீண்டும் எம் ஐ தோற்கடித்து வெற்றி பெற்றான். இதனால் தான் எனக்கு பாரின் மீது கோபமும் பகையும் ஏற்பட்டது ஔவைப் பாட்டியே, இது நியாயமா! இது தர்மமா! தர்மத்திற்கு எதிராக செயல்பட்டான் பாரி.
பாண்டிய மன்னன்: ஹா ஹா ஹா சேரனுக்கு மட்டுமா இப்படி செய்தான் பாரி, எனக்கு என்ன என்ன செய்தார் என்று தெரியுமா அவ்வை புலவரை!
கிராமப்புற காட்சிகள்:
ஜோ என்று மழை பெய்தது. ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றன.
ஐந்து கிராமவாசிகள், தலையில் பைகளை சுமந்து கொண்டு தங்கள் ஊர்களுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
கிராமவாசி கந்தா: அதோ பார் கண்மணி, ஏதோ ஒரு உருவம் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. அது என்ன பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது.
கிராமவாசி கண்மணி:
ஆமாங்க எனக்கும் அப்படி தான் தோணுது அது கிட்ட எல்லாம் போகாதீங்க!
வழிப்போக்கன்:
பயப்படாதீங்க அது ஒன்னும் இல்ல அதுக்கு பேரு தேவாங்கு! அது மழை பெய்வது நாள், காட்டுப்பாக்கத்தில் இருந்து நம்ம வீட்டு பக்கம் வந்துடுச்சு, பயப்படாதீங்க.
கிராமவாசி கந்தா: ஓ அப்படியா. வாங்க நம்ம அத பிடிப்போம்.
கிராமவாசி கண்மணி:
என்னங்க அதை புடிச்சு நீங்க என்ன பண்ண போறீங்க?
கிராமவாசி கந்தா: விசித்திரமான பொருள் பாண்டிய மன்னருக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால் அதை பிடித்து மன்னருக்கு நான் பரிசாக கொடுப்பேன். இதைக் கண்டு வியந்து மன்னர் எனக்கு நிறைய பொற்காசுகள் அளிப்பார்.
" நடக்கும் காட்சிகள் அவையில் வெளிப்பகுதி மற்றும் உட்பகுதி"
கிராமவாசி கந்தன்:
வணக்கம் பாண்டிய மன்னரே! என்னிடம் ஒரு அரிய விலங்கு உள்ளது
பாண்டிய மன்னர்:
என்ன இது மிகவும் அரிதாக உள்ளது
கிராமவாசி: இதற்குப் பெயர் தேவாங்கு இது பாரியின் பரான் மலையில் இருக்கும் அரிய விலங்கு பாண்டிய மன்னரே!
பாண்டிய மன்னர்:
அதைக் கீழே விடு பாப்போம்
'கிராமவாசி அரசவையின் நடுவே அந்த விலங்கை மெல்ல கீழே இறக்கி விட்டான் தரையில்"
தேவாங்கு கீழே இறங்கியவுடன் மன்னரின் அரியாசனத்தை பார்த்து அமர்ந்தது
மீண்டும் அதை எடுத்து கிராமவாசி கீழே இறக்கி விட்டான், மீண்டும் அதே திசையை நோக்கி பார்த்தது
பாண்டிய மன்னர்: என்ன இந்த விலங்கு விசித்திரமாக உள்ளது எங்கு கீழே இறக்கி விட்டாலும், அது வடக்கு திசை நோக்கி அமர்கிறது.
பாண்டிய மன்னன்:
அமைச்சரே எனக்கு சிறிய யோசனை தோன்றுகின்றது இந்த விலங்கு அனைத்தையும் பாரின் இடத்தில் சென்று நாம் பிடித்துவிட்டு இதை நாம் கடல் கடந்து வரும் அந்நிய மன்னர்களுக்கு இதை நாம் பரிசாக அடிப்போம், நம் நாட்டில் இருக்கும் வணிகங்கள் பெருகும், நம் நாடும் உயரும்.
அமைச்சர்: அப்படியே ஆகட்டும் நான் வீரர்களை தயார் படுத்துகிறேன் மன்னரே
பாண்டிய மன்னன்: ஹாஹாஹாஹா ஒரு தேவாங்கு காக போரா அது சரிவராது அமைச்சரே!
கிராமவாசி: மன்னரே ஒரு சிறிய யோசனை நான் கூறவா!
பாண்டிய மன்னர்: சரி கூறு
கிராமவாசி: பிரான் மலையில் வசிக்கும் ஆதிவாசிகள் இந்த விலங்கை பிடிப்பதில் கைதேர்ந்தவர்கள் ஆகையால் அவரை வைத்து இந்த காரியத்தை நாம் செய்யலாமே! மன்னரே
பாண்டிய மன்னன்; மிகவும் சரியான யோசனை அப்படியே செய்யலாம். அமைச்சரே நீங்கள் அதற்கான காரியத்தை முன்மொழிவுகள்.
அமைச்சர்: அப்படியே ஆகட்டும் மன்னரே.
"வெளிப்புறக் காட்சிகள் ஆதிவாசிகளுக்கும் மற்றும் அமைச்சருக்கும் இடையே நடக்கும் வாதங்கள்"
ஆதிவாசி: நீங்கள் பாண்டிய மன்னரின் அமைச்சர் தானே!
அமைச்சர்: ஆமாம் சரியாக கூறினாய், நான் பாண்டிய மன்னரின் அமைச்சர் தான்.
உங்களால் எனக்கு சில காரியங்கள் நடக்க வேண்டி உள்ளது. அதை நடத்தி கொடுத்தால் உங்களுக்கு தேவையான வசதிகளையும், பொருட்களையும், எங்கள் மன்னர் உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார். இல்லையெனில் உங்கள் அனைவரையும் மன்னர் அழித்து விடுவார்.
ஆதிவாசி: நாங்கள் எவ்வாறு பாரி மன்னருக்கு துரோகம் செய்வோம்??
அமைச்சர்: உங்களுக்கு எங்கள் பாண்டிய மன்னரை பற்றி நன்றாக என்ன செய்வார் என்று தெரியும்!
ஆதிவாசி :சரி அவ்வாறே நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள்.
"பாரிக்கும், ஆதி வாசிக்கும் இடையே நடக்கும் போர் மற்றும் இருவருக்கிடையே ஏற்படும் வாதம்."
ஒற்றன்: பாரி மன்னரே பெரிய ஆபத்து நேர்ந்திருக்கிறது தெய்வவாக்கு விலங்குக்கு.
இனத்தையே மொத்தமாக தூக்க நினைக்கிறார்கள் பாண்டிய நாட்டு மன்னன்.
பாரி: என்ன கூறுகிறாய் நீ கூறுவதெல்லாம் உண்மையா ?ஓற்றா!
ஒற்றன்: ஆம் மன்னரே.
மாவீரன்: மன்னரே! இந்த ஆதிவாசி மனிதன் அனைத்து தெய்வ வாக்கு விலங்குகளையும் பிடித்துக் கொண்டு செல்கிறான் எதற்கு என்று கேட்டால் திருதிருவென்று முழிக்கிறான்.
ஆதிவாசி; மன்னித்துவிடுங்கள் மன்னரே, பாண்டிய மன்னர்கள் மிரட்டி எங்களை அடிபணிய வைத்து விட்டார்கள்.அன்னிய தேச மன்னர்களுக்கு வட திசை காட்டும் கருவியாக இதை பரிசளிக்க போகிறாராம்
பாரி; அப்படியா நான் தக்க பதிலடி கொடுக்கிறேன் பாண்டிய மன்னருக்கு.
"நீல னுக்கும் பாரி மன்னருக்கும் இடையே நடக்கும் உரையாடல் அரண்மனையில் உட்பகுதியில்"
பாரி: நீலனே! நம்மிடமுள்ள குதிரைப்படையும், காலாட்படையும் வைத்து பாண்டிய மன்னரின் வணிக இடங்களை தகர்த்து எறியுங்கள் நிலனே.
நீலன்: அவ்வாறே ஆகட்டும் மன்னரே இதோ நான் புறப்படுகிறேன்.
"கடல் புற பகுதிகள் மற்றும் பாண்டியன் அரசவை மற்றும் வெளிப் பகுதிகள்"
நீலன் தன்னிடம் உள்ள அனைத்து படைகளையும் கொண்டு பாண்டிய மன்னனின் துறைமுகத்தை மொத்தமாக எரித்தான்.
அண்ணிய மன்னர்: மன்னரே உங்கள் துறைமுகத்தை எரித்து விட்டார்கள் பாரியின் படைகள்.
உங்களை நம்பி வந்த நாங்கள் எங்கள் கப்பலையும் மற்றும் பொருட்களையும் இழந்தோம் மன்னனே.
பாண்டிய மன்னர்: அவர் செய்த நியாயமற்ற செயல்களைப் பற்றி இப்பொழுது கூறுங்கள் புலவரே!
ஆகையால்தான் மூவேந்தர்களும் இணைந்து பாரியை பழிவாங்க எனினும் இதில் என்ன தவறு உள்ளது புலவரே!
தேன்குழலி:நிறுத்துங்கள் பாண்டிய மன்னரே, அவர் செய்த நல்ல விஷயங்கள் பல உள்ளன. உங்களுக்கு கபிலர் மிகவும் நெருங்கிய நண்பர் தானே அவரை கேட்டுப் பாருங்கள் தெரியும். எங்கள் மன்னரும் கபிலரும் மிக நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு தெரியுமா மன்னரே!! அவளுடைய நட்பு எப்படிப்பட்டவை தெரியுமா? கூறுகிறேன் கேளுங்கள்!!!
"நினைவூட்டல் காட்சி"
ஒருமுறை கபிலர் வருகிறார் என்று தெரிந்தவுடனே எங்கள் மன்னர் அவரை வரவேற்க சென்றுள்ளார் அப்போது கபிலர் நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து கொண்டு வந்தார். அப்போது எங்கள் மன்னர் அவர் கஷ்டப்பட்டு நடப்பதை பார்த்து அவரை தன் தோள் மீது சுமந்து கொண்டு மலையின் கீழிருந்து மேல் வரை கூட்டிக்கொண்டு வந்தார்.
அப்படிப்பட்ட நட்பு அவர்களுக்கு உண்டு.
பாண்டிய மன்னன்: இப்பொழுது நான் இரண்டு விஷயங்களை கூறுகிறேன் கேள்
முதல் விஷயம்: மூவேந்தரும் தனித்தனி காரணங்களால் மூவேந்தரும் இணைந்து பாரியை பழிவாங்க எண்ணினோம்.
நாங்கள் மூவரும் இணைந்து திட்டம் தீட்டினோம் அனைத்து படையையும் உபயோகித்து பாரியை பழிதீர்க்க எண்ணினோம்.அப்போது சேரமன்னன்
"நினைவூட்டல் காட்சி"
சேர மன்னன்: பாரி மிகவும் புத்திக் கூர்மை உடையவன் மற்றும் அவனை அழிப்பது மிகவும் எளிமையான காரியம் அல்ல, ஏனென்றால், அது அவன் இருக்கும் பரம்பு மலையை காரணம், காட்டுக்குள் இருக்கும் இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தையும் பாரி நன்குஅறிந்துள்ளார்.
இதைக்கொண்டு அவன்
எளிதாக நம்மை வென்று விடுவான்.
பாரி மலைமீது இருக்கும்போது அவனை வெல்வது மிகவும் கடினம் ஆனால் அவனை கீழே வர வைத்து விட்டால் அவனை வெல்வது நமக்கு மிகவும் எளிய காரியம்.அதற்கு என்னிடம் ஒரு யோசனை உள்ளது பாரி தளபதி நீலனை நாம் கடத்தி விடுவோம்.
பாண்டிய மன்னன்:
அவ்வாறே ஆகட்டும்
"இருட்டு வேளை வெளிப்புறக் காட்சிகள்"
இருட்டில் நின்று கொண்டிருக்கும் நீலனை போர்வீரர்கள் கள்ளத்தனமாக சென்று கையும் களவுமாக பிடித்து பாண்டிய தேசத்திற்கு இழுத்து வந்தனர்.
சிறையில் தள்ளினர்.
"வெளிப்புறக் காட்சிகள் மற்றும் ஒரு காட்சிகள்"
அமைச்சர்: பாரி மன்னன் நீலனை கடத்தியதாக பாண்டிய தேசத்து மன்னர்கள் ஓலை அனுப்பி உள்ளனர். மேலும் அவர்கள் உங்களை சமநிலையில் போரிடும் படி கட்டளை இட்டு இருக்கிறார்கள். மேலும் நம்மிடம் குறைந்த எண்ணிக்கையில்தான் போர்வீரர்கள் இருக்கிறார்கள் மூவேந்தர்களை காட்டிலும்.
பாரி: ஹா ஹா ஹா என்று சிரித்துக்கொண்டே போருக்கு தயாராகுங்கள். பார்த்து விடுவோம்.
பாரி: பாரி மலை உச்சியின் மீது நின்று கீழே என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறார் அப்போது காளான் படை, குதிரைப்படை இருந்தது, வீரனே அவர்களின் யானைப்படை எங்கே போயிற்று.
வீரன்: யானைப்படை வேறொரு வழியாக வருகிறது அவை எப்போது வேணாலும் நம் படையை தாக்கலாம்.
பாரி: எதற்காக அவர்கள் நம்மை இருபுறத்திலும் தாக்க நினைக்கிறார்கள்.
வீரன்: வெப்பம் அதிகமாக உள்ளதால் இங்கு நீர் வளம் மிகவும் கம்மியாக உள்ளது
மலையின் பின்பகுதியில் ஒரு ஓடை உள்ளது அதில் நீர் வளம் அதிகமாக உள்ளது யானைகளுக்கு நீர் அதிகமாக வேண்டும் என்பதால் அவர்கள் அந்த வழியாக மேல் நோக்கி வருகின்றனர். நம்மை தாக்குவதற்கு.
பாரி: வீரனே நான் சொல்லுவது நன்றாக கேள் கீழே ஓடையில் நம் வீரர்கள் சிலரை கூப்பிட்டு அதில் சிறிய சிறிய அட்டைப் பூச்சிகளை நீரோடையில் விடவும். பிறகு என்ன நடக்கும் என்று என்னிடம் வந்து கூறு.
போர் காட்சி: யானைகளும்,போர் வீரர்களும் கீழே விழும் காட்சி. காட்டெருமைகள் யானை கூட்டத்திற்குள் விட்டு யானைகளை விரட்டும் காட்சி.
பாண்டிய மன்னன்: போரை நாம் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால், பாரி போரை ஆரம்பித்து ஆரம்பித்து விட்டான்.
என் யானைப்படை அனைத்தையும் அழித்துவிட்ட பாரியை நான் சும்மா விடமாட்டேன். அடுத்து உங்கள் குதிரைப் படையை வைத்து அவனை தாக்க வேண்டும்.
"மூவேந்தர்களும் குதிரைப் படையை வைத்து தாக்க முன்னேறி சென்றனர். பாரி அவரை நோக்கி முன்னேறி வந்தார். இருவரும் அருகில் வரும் நேரத்தில் பாரி சாதுரியமாக தன் குதிரையை பின்னோக்கி செலுத்துங்கள் என்று வீரர்களிடம் கட்டளையிட்டான். பாரியின் குதிரை பின்னோக்கிச் சென்று பாறையின் உச்சியில் நின்றது, ஆனால் மூவேந்தர்கள் குதிரை ஏற முடியாமல் மெல்ல மேல்நோக்கி வரத்தொடங்கியது. ஏனென்றால் பாரின் குதிரையில் போர்க் கவசம் உள்ளன அவர்கள் குதிரையில் போர்க் கவசம் இல்லை. ஆகவே குதிரைகளை ஓட ஓட விரட்டினான் பாரி".
முதல்முறை மூவேந்தரும் தோல்வியை தழுவினர் பாரிடம்
பாண்டிய மன்னன்: நான் கூறும் இரண்டாவது விஷயம் பாரியின் நட்புக்குரிய கபிலரே எங்களுக்கு சரியான ஆலோசனையை கொடுத்துச் சென்றது அது உனக்குத் தெரியுமா தேன்குழலி.
தேன்குழலி: பாண்டிய மன்னரே நீங்கள் பொய் சொல்கிறீர்கள் எங்கள் கபிலர் அவ்வாறு செய்ய மாட்டார்.
பாண்டிய மன்னன்: சொல்கிறேன் கேள் மூவேந்தரும் கூடிய ஆலோசித்தோம் பாரியின் பலம் மலைக்குன்று தான்.ஆகவே மலையிலிருந்து கீழே இறங்கும் அனைத்து மக்களையும், நம் படைவீரர்கள் வைத்து கொன்று விடுவோம். பாரி தானாக கீழே இறங்கி வந்து விடுவான்.நாட்கள் கடந்தன மூன்று மாதங்கள் கடந்தும் யாரும் வரவில்லை..அப்போது புலவர் கபிலர் அவ்வழி சென்று கொண்டிருந்தார்.கபிலரே வணங்குகிறோம் நாங்கள்.
சேர மன்னன்: கபிலரே இத்தனை நாட்கள் ஆகியும் யாரும் கீழே இறங்கி வரவில்லையே ! உணவுகள் எவ்வாறு அவர்கள் உண்ணுகிறார்கள்.
கபிலர்: மௌனமாக சிரித்தார். அம்மலையில் அனைத்து வகையான பழங்கள் கிடைக்கும். பிறகு நெல் மணிகளும் கிடைக்கின்றன.
சேர மன்னன்: அந்த மலையில் நெல்மணிகள் கிடைக்கின்றனவா! எப்படி?
கபிலர்: பாரியிடம் ஆயிரம் கிளிகள் உள்ளன. அனைத்து கிளிகளும் நெற்பயிர்களை எடுத்து கொண்டு பாரிடம் சேர்த்துவிடும். அவர்களுக்கு தானியமும் கிடைத்துவிடும்.
பாண்டியமன்னர்: கபிலரே நீங்கள் பாரியின் நல்ல நண்பர் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் எங்களைப் பற்றியும் பாடுங்கள் நாங்களும் உங்களுக்கு பரிசுகள் அதிகமாக கொடுக்கிறோம் மேலும் நாங்கள் பாதியை எப்படி மீட்க வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.
கபிலர்: உங்களால் குதிரைப் படையை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது ஏனென்றால் பாரி குதிரைப் படையில் வல்லவன்.
சோழ மன்னர்: யானைப்படை வைத்தும் எங்களால் ஒன்றும் பண்ண முடியவில்லை. ஆதி மலை வழியாக செல்லும்போது எங்கள் படை தோற்று விட்டது.
கபிலர்: நீங்கள் ஆனைமலை வழியாக சென்றிருக்க கூடாது. அது உங்களுடைய தவறு.
சோழ மன்னர்: ஏனாதி மலை வழியாக சென்றிருக்க கூடாது
கபிலர்:
முன்பொரு காலத்தில் அது யாழி மலை. காலப்போக்கில் அது ஆதி மலையாக மாறியது.
பாண்டிய மன்னன்: கோயில் சிற்பங்கள் இருக்குமே அந்த மிருகம் தானே யாழி ஒரு கற்பனையான மிருகம் தானே அது.
கபிலர்: யார் கூறியது அது கற்பனையான மிருகம் அல்ல அது ஒரு வலிமையான மிருகம். யாழி பிறந்தவுடனே யானைகளைக் கொன்று தின்றுவிடும். யானைகளுக்கு ஞாபக சக்தியும் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளும் சக்தியும் அதிகம். ஆகவேதான் அம்மலையில் யானைகள் செல்வதற்கு தயங்குகின்றன இன்னமும் மெதுவாக செல்கின்றன.
பாண்டிய மன்னர்: சரி கபிலரே பாரியை விடுவதற்கு நல்ல ஒரு யோசனையை கூறுங்கள்.
கபிலர்: மன்னர்களே பாரி வேள் கொண்டும் வால் கொண்டு வீழ்த்த முடியாது. ஆகவே பாரிடம் சென்று நீங்கள் மூவரும் புலவர் வேடமணிந்து நல்ல ஒரு பாடல்களைப் பாடி பாரியை மகிழ்வித்தால். நீங்கள் அவளிடம் மலையை கேட்டால் அவனே கொடுத்து விடுவான். என்று மீண்டும் சிரித்தார் கபிலர்.
பாண்டிய மன்னன்; என்ன கபில எங்களைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறதா உங்களுக்கு.
கபிலர்: இல்லை மன்னரே பாரி பாட்டுக்கு அடிமையானவன் இவ்வாறு தன்னிடம் இருந்த 300 கிராமங்களையும் தாரைவார்த்து விட்டான் இப்போது இருக்கும் ஒரே ஒரு மலை அது மட்டுமே .அதையும் யாருக்கு தாரைவார்த்து விட்டால் உங்களுக்கு ஏதும் மிஞ்சாது ஆகவே அதை நீங்கள் யாசகம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்
என்று சிரித்து விட்டுச் சென்றாராம் கபிலர்.
பரம்பு மலைப்பகுதி மூவேந்தரும் வேடம் அணிந்து கொண்டு ஆடியும் பாடியும் பாரின் இடத்திற்கு சென்றடைந்தனர்.
பாரி மன்னன்: புலவர்களே உங்கள் ஆட்டமும் பாட்டமும் எனக்கு மிகவும் பிடித்தது தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள் புலவர்களே.
பாரியை சுற்றி அனைத்து கூட்டங்கள் புலவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர்.
வேல்பாரி: வேல்பாரி மூன்று புலவர்களையும் நோக்கி தங்களுக்கு என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் புலவர்களே நான் உங்களுக்கு அதை கொடுக்கிறேன்.
மூவேந்தர்கள்: ஒன்று இந்த பறம்புமலை. மற்றொன்று உங்களின் உயிர்.
பாரியின் புலவர்: புலவர்களே தங்களுக்கு என்ன பித்து பிடித்து விட்டதா. இவர் யார் என்று தெரியுமா மூவேந்தர்களையும் தோற்கடித்த மாவீரன் பாரி.
பாரி: புலவரே சற்று பொறுங்கள் நீங்கள் கூறும மூவேந்தர்கள் அவர்கள்தான். எப்படிக் கொண்டு வீழ்த்த முடியாது என்று சூழ்ச்சியில் இறங்கி விட்டீர்களோ மூவேந்தர்களை என்று புன்னகைத்தார் வேல்பாரி.
வேல்பாரி: தன் கையில் இருக்கும் வாள்லை தடாலென்று எடுத்தார்கள் பாரி. அவையில் ஒளிந்துகொண்டிருக்கும் மூவேந்தர்களின் படைவீரர்கள் மெல்ல எழுந்தனர். ஆனால் வேல்பாரி தன் கையில் இருக்கும் வாள்லை குணசேகர பாண்டியன் கையில் கொடுத்தார். மன்னர்களே பாரு என்றும் சொன்னசொல் தவறாமை மாட்டான் என்னுடைய வாக்கு மாறாது உங்களுக்குத் தேவையான இந்த மழையையும் என் உயிரையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார் சிரித்துக்கொண்டே பாரி.
குலசேகர பாண்டியன்: சற்றும் தயங்காமல் தன் கையிலிருக்கும் வாளை உருவிக் ஓங்கினான் பாதையை வெட்டுவதற்கு.
சேர மன்னன்: உடனே பாய்ந்து தடுத்தான் சேரமன்னன். எவ்வாறு என் முன்னே என் தந்தையை கொன்றானோ அதே மாதிரி அவனை அவர் மகள்கள் இருவரின் முன்னிலையில் நான் கொள்ள வேண்டும் என்றான் சேரமன்னன்.பாரியின் மகள்கள்
அங்கவை, சங்கவை இருவரும் அவைக்கு இழுத்து வரப்பட்டனர்.
சேர மன்னன்; அவையிலிருந்த அனைவருமே அமைதியாக இருந்தனர் தன் மகளை இழுத்து வந்ததை பார்த்ததும் அனைத்து புலவர்களும் அமைதி கொண்டு பாரியின் கட்டளைக்காக அமைதியாக இருந்தனர். சேர மன்னன் தன் கையிலிருக்கும் வாளை வீசினான். பாரியின் கைகள் துண்டு ஆகியது. அவையில் அனைவருமே கூச்சலிட்டனர். வேல்பாரி வலியில் துடிதுடித்தான்.
வேல்பாரி; வேள்பாரி என் இரு மகள்களும் அப்பா என்று ஓடி வந்தனர் இருவரும் கதறி அழுதனர். தங்கள் தந்தையை விட்டுவிடும்படி வேந்தர் இடம் கதறினர். மூவேந்தரும் மனம் இரங்கவில்லை. பாரி கபிலர் அழைத்தார். கபிலரே எங்கள் மகள்களுக்கு தந்தையாக நீர் இருந்து அவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்யுங்கள் என்றார்.
பின்னர் வீரத்தோடு மறுபடியும் எழுந்தார் வேல்பாரி.
மூவேந்தர்கள்: ஆரிய தங்கள் வீரம் குறையவில்லை போலும் என்று துடையை கிழித்தார் பாண்டிய மன்னர். முதுகில் குத்தினார் சேரர் பின் வயிற்றைக் கிழித்தார் சோழ மன்னன். பின்னர் தன் காலால் எட்டி உதைத்தார். வேல் பாரியின் இமைகள் மெல்ல மூடி திறந்தன. மன்னன் தன் கைகளில் இருக்கும் வாலால் இரு கண்களையும் குத்தி எடுத்து விட்டான். பின்னர் விஷப் பாம்புகளை மேலே கொத்த விட்டான். வடிகால் துடிதுடித்துப் போனார் பாரி. சேர மன்னன் கூறினான் நேர்மையாக போடு போரிட்டு இருந்தால் இப்படி நேர்ந்திருக்காது உனக்கு மரணம்.
வேல்பாரி: மீண்டும் புன்னகையோடு சிரித்தார்
வேல்பாரி; அறத்தைப் பின்பற்றும் மூவேந்தர் ஏ. உன்னுடைய முன்னோர்கள் போர் தர்மத்திற்கு முன்பு சமர் என்ற முறையை கையாண்டார்கள் உன்னுடைய முன்னோர்கள் உனக்கும் அதை கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். சமர் என்றால் போர் தர்மம் ஒருவனிடம் யானைப்படை இல்லை என்றால் அவனை யானைப்படை கொண்டு தாக்க கூடாது. ஒருவனிடம் எவ்வளவு குதிரைப் படைகள் உள்ளதோ அவ்வளவு குதிரைகள் தான் வைத்தாக வேண்டும். ஒருவரிடம் எத்தனை வீரர்கள் இருக்கிறார்களோ அத்தனை வீரர்கள் கொண்டுதான் படையெடுக்க வேண்டும். இதுவே சமர் இதுவே போர் தர்மம். அறத்தையும் தர்மத்தையும் பின்பற்றாமல் போர் தொடுத்தவர்கள் நீங்கள். என்ன சேர மன்னர் எங்கள் மக்கள் சுதந்திரமாக வாழ நினைத்தார்கள் அவர்களை அடிமையாக்கி நினைத்தார். உன் தந்தை. அடிமையாக மாற்றுவோம் என்று கூறியது எங்கள் தவறா. அடுத்து சோழமன்னர் அடுத்தவரின் செல்வத்தை அடைவது தான் தர்மமோ அதற்காக தான் என் மீது போர் தொடுத்து ஹீரோ. செல்வங்கள் மீது எனக்கு அவா இல்லை ஆனால் அதைக் காப்பது என் கடமை.
அடுத்து பாண்டிய அரசரே சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் என் காட்டில் இருக்கும் விலங்கை அதன் அருமை தெரியாமல் அதன் அந்தம் புரியாமல் அதை கடல்கடந்து அனுப்பினீர்கள் இவ்வுலகில் ஒவ்வொரு உயிரினத்தின் அழிவில் மற்றொரு உயிரினம் ஆரம்பிக்கிறது இதைப் புரிந்து கொள்ளாமல் இயற்கைக்கு விரோதமாக நீ செய்தது நியாயமா தர்மமா ஆனால் அதை தடுக்க நான் செய்தது அதர்மம் என்று சிரித்தார் பாரி. இதுதான் மூவேந்தர்கள் ஞாயம், தர்மமா.
மூவேந்தர்: அனைவரும் மவுனமாக உங்களுடைய கடைசி ஆசை என்னவென்று கூறுங்கள், பாரியும் உடல்முழுவதும் குருதிப்புனல் மெல்ல எழுந்தார் பாரி நீர் வேண்டும். மூவேந்தரும் கையிலிருக்கும் வாளால் பாரியை வெட்டி வீசினர் மூவேந்தர் எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று அனைவரும் சென்றனர்.
Comments
Post a Comment